Add this page to Favorites! அன்பார்ந்த வாசர்களே தங்களது வருகைக்கு நன்றி ! இந்த வலை தளத்தை தங்களது Favourite பகுதியில் Book Mark செய்து கொள்ளவும். மருத்துவ சம்பந்தமான கட்டுரைகள் தொடர்ந்து வெளியடப்படும். தங்களது ஆரோகியமான ஆக்கபூர்வமான கருத்துக்களை கருத்துரை பகுதியில் வெளியிடவும். அறிவோம் மருத்துவம்: விரட்டுவோம் குறட்டையை
இவ்வுலக வாழ்க்கை உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60

செவ்வாய், 17 மார்ச், 2009

விரட்டுவோம் குறட்டையை

டாக்டர் ரவி ராமலிங்கம்

சாதாரணமாக நோயாளிதான் 'எனக்கு இப்படிஇருக்கு டாக்டர் இங்கே வலிக்குது டாக்டர்" என்று தனக்குள்ள பிரச்சினையைச் சொல்வார்.
ஆனால், குறட்டையைப்பொருத்தவரை நோயாளி எதையும் சொல்லமாட்டார். உடன் வருகிறவர்கள்தான் அவர் விடுகின்ற குறட்டையால்அதிகம் பாதிக்கப்பட்டு "இவர் ரொம்ப குறட்டை விடுறார் டாக்டர். இவர் நல்லா தூங்கிடுறாரு.எங்களுக்குத்தான் தொந்தரவா இருக்கு" என்பார்கள்.
உண்மையில் குறட்டை விடுகிறவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்களா? என்றால் அதுதான் இல்லை.

நாக்கு அண்ணம் ஆகியவை நாம் அசந்து தூங்குகிறபோது இறுக்கம் தளர்ந்துசுவாசக் குழாய் மேல் படிந்து அழுத்துகிறது. இதனால் சுவாசம் தடைப்பட்டு அதிர்வு உண்டாகிசப்தம் வருகிறது.

ஆக குறட்டை விட்டால் சரியான சுவாசம் இருக்காது. ஒருவிதத் தடங்கலோடுதான்தூங்க வேண்டியதிருக்கும் என்கிறார் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-
பொதுவாக நமக்கெல்லாம் குறட்டை ஒரு விளையாட்டான விடயமாகத்தான்தெரிகிறது. ஆனால், குறட்டையை விளையாட்டாகஎடுத்துக் கொள்ள முடியாது. குறட்டையினால் உயிரே கூடப் போயிருக்கிறது. குறட்டை விடும்போதுசுவாசம் தடைப் படுவதோடு மட்டுமல்லாமல், சில சமயம்மூச்சுத் திணறல் உண்டாகிவிடும்.

குறட்டை விட்டுத் தூங்குபவர் அலறியடித்து திடீரென்று எழுவதுஇதனால்தான். விழித்ததும் சுவாசம் திரும்பக் கிடைத்து விடுகிறது. இவ்வாறு உண்டாகிற மூச்சுத்திணறலை "ஸலீப் அப்னியா சிண்ட்ரோம்" என்கிறோம்.

ஒருவர் ஏழு மணிநேரம் தூங்குகிறார் என்றால், அதில் குறைந்தது 30 தடவை மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றாலோ, "ஹீரோயிக் ஸ்னோரிங்" என்கிற தீவிர குறட்டைவிடுகிறவர்களாக இருந்தாலோ, விட்டுவிட்டுத்தூங்கக் கூடியவராக இருந்தாலோ அதாவது இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூக்கமும் தலைவலியோடு விழிப்பது, உற்சாகமாக இல்லாமல்இருப்பது போன்ற பாதிப்புள்ளவர்களாக இருந்தாலோ "ஸ்லீப் அம்னீசியா சிண்ட்ரோம்"வர வாய்ப்புகள் உள்ளன.

மூளையில் இருக்கிற "தூக்கம் சம்பந்தப்பட்ட செல்களில் கோளாறுஏற்பட்டாலும் அதனால் சுவாசம் சரியாக நடைபெறாமல் சுவாச நிலையும் பாதிக்கப்பட்டு அதனாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம்.

குழந்தைகளைப் பொருத்தவரை டான்சில் மற்றும் அடினாய்டு சதை வளர்ச்சியால்சுவாசப் பாதை தடைப்பட்டு குறட்டை வரலாம். சிலருக்குத் தாடை சின்னதாக இருக்கும். நாக்குபெரியதாக இருக்கும். வாயில் இடம் போதாமல் சுவாசப் பாதை அடைத்துக் கொண்டிருக்கும். இதனாலும்குறட்டை வரும்.

தவிர, மூக்குச்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மூக்கு எலும்பு வளைந்து இருத்தல், பாலிப் சதை வளர்ச்சி, மூக்கடைப்பு போன்றவையாலும் தொண்டை மற்றும்குரல் வளையில் ஏற்படுகிற அடைப்புகளாலும் குறட்டை வரும்.
சாதாரணமாக ஒருவர் விழித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய ரத்தத்தில்நூறு சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கிறது என்றால்,அவர் தூங்குகிற வேளையில் 90 சதவிகிதஆக்சிஷன் தான் இருக்கும்.

இது சாதாரண நிலையில். ஆனால், ஒருவர் குறட்டை விட்டுத் தூங்குகிறார் என்றால், சுவாசம் தடைப்பட்டு அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன்அளவு எழுபது சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

இப்படியே தொடர்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தால், குறைச்சலான ஆக்சிஜனால் மூளைத் திறன் குறைந்து, மறதி,எரிச்சல், கோபம் போன்ற பாதிப்புகள்ஏற்படு கிறது. ஆக்சிஜன் குறைவினால் இதயம் செயலிழந்து போகும் அபாயம் ஏற்படுகிறது.

தவிர குறட்டை விடுவது தொடர்ந்தால் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி, பக்க வாதம் போன்றவையும் ஏற்படலாம்.
குறட்டை விடுவதைச் சரி செய்தாலே இவற்றையெல்லாம் சரி செய்துவிடலாம்."ஸ்லீம் - லே-பரட்டரி" என்று இப்போது நிறைய வந்துவிட்டன. நோயாளியின் குறட்டைஎந்த அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதை இங்கே கணித்துச் சொல்கிறார்கள்.
நோயாளியை இங்கே ஓர் இரவு தூங்கக் கூறி அந்த சமயத்தில் அவருடையகுறட்டை அளவு, இதயத் துடிப்பு, மூளையின் செயல்பாடு, கண்,அடிவயிற்றின் அசைவு, மூக்கு மற்றும்வாய்ப் பகுதிகளில் காற்றின் போக்கு, நாடித் துடிப்பு, ரத்தத்தில் இருக்கிற ஆக்சிஜன் அளவு, எத்தனை முறை மூச்சுத் திணறல் உண்டாகிறது இப்படிபலதரப்பட்ட விடயங்களைக் கவனித்து அந்த நோயாளியின் குறட்டை தூக்கத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விடுகிறார்கள்.

அந்த முடிவை வைத்து அவருடைய குறட்டையின் வலிமையை உணர்ந்து சிகிச்சைதரப்படுகிறது. லேப்களில் கண்டுபிடிக்கிற இந்த அக்குவேறு ஆணி வேறு அலசலை "பாலிசோம்னோகிராம்"என்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக