முகப்பரு எதனால் உண்டாகிறது ? | |
| |
யாருக்கு முகப்பருக்கள் வரும் ? | |
| |
எந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் ? | |
| |
முகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன ? | |
|
ஞாயிறு, 26 ஏப்ரல், 2009
முகப்பரு
சனி, 18 ஏப்ரல், 2009
இரத்த சோகை
I. 1.இரத்த சோகை என்றால் என்ன?
நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதசத்து உள்ளது. இது தான் நமக்கு தேவையான பிராண வாயுவை உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லுகிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
2. இரத்த சோகை நோயின் அறிகுறிகள் யாவை?
மயக்கம், கிறுகிறுப்பு, உடல் சோர்வு, தோல் மற்றும் நகங்கள் வெளுத்து விடுவது, முகம், கை, கால் வீங்கி விடுவது, மூச்சுவிடச் சிரமம்.
II. இரத்த சோகை நோய் வருவதற்கான காரணங்கள்:
-
சத்து குறைவான உணவினால் இரத்தச்சத்து மற்றும் ஃபோலிக்ஆசிட் எனும் சத்து நமது உணவில் குறைவதால்.
-
அணைத்து வித புற்று நோய்களுக்கும் தரப்படுகின்ற கீமோதெரப்பி, ரேடியம் தெரப்பி எனப்படும் மருத்துவ சிகிச்சையால்
-
நம் குடலில் உண்டாகும் குடல் புழுக்களால்
III. நமது உடலின் தலை முதல் பாதம் வரை உண்டாகும் பல்வேறு வியாதிகளால்:
-
மூளையில் ஏற்படும் புற்றுரநோய் கட்டியால் ஏற்படும் இரத்தக்கசிவுகளால்
-
மூக்கில் இரத்தம் வருவதால்
-
வாய் மற்றும் தொண்டைப்புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்
-
வாய் மற்றும் தொண்டை புண்களில் இருந்து இரத்து கசிவு ஏற்படுவதால்
-
சுவாசப்பையில் நுரையீரல் புற்று நோய் மற்றும் டிபி நோய்களால்
-
இரைப்பையில் அல்சர் ஏற்படும் புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்
-
மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற காய்ச்சல்களால் கல்லீரல் மற்றும் கணையம் போன்றவகைகளில் வீக்கம் ஏற்பட்டு இரத்த வாந்தி வருவதால்
-
குடல் புண்களால் குடல் இரத்தத்தை உறிஞ்சக்கூடிய தன்மை இழப்பதால்
-
சிறுநீரகத்தில் புற்று நோய்கட்டிகளால் மேலும்
-
டி.பி.நோய் போன்றவற்றின் பாதிப்புகளால் இரத்த கசிவு ஏற்படுவதால்
-
கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டிகள் மற்றும் உதிரக்கட்டிகளால் உதிரப்போக்கு அதிகம் ஏற்படுவதால்
-
நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவதால்
-
குடல் மற்றும் மலம் கழிக்கும் ஆசனவாய் போன்ற பகுதிகளில் புற்று நோய் கட்டிகள் ஏற்படுவதால்
-
ஆசனவாயில் மூலம் மற்றும் பவுத்திரம் போன்றவைகளால் இரத்த கசிவு ஏற்படுதல்
IV. கர்பிணிப்பெண்கள் பேறுகாலத்திலும், குழந்தைகளுக்கு பாலுட்டும் காலத்திலும் சத்தான உணவை சாப்பிடாமல் இருத்தல்
V இரத்த சோகையைக் கண்டறிவது எப்படி ? இரத்த சோகை நோய் கண்டறியும் முறை:
-
மேற்கூறிய அறிகுறிகள் எது இருந்தாலும் மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று, இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB%) அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
-
மருத்துவரின் அலோசனைப் பெற்று 6 மாதங்களுக்கு ஒருமுறை குடல் புழுக்களை அழிக்கும் பூச்சி மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.
-
இரத்த சோகை அதிகம் இருப்பின் இதற்கும் மருத்தவரின் ஆலோசனை பெற்று 3 மாதங்களுக்கு தொடர்ந்து இரத்தச்சத்து மாத்திரை மற்றும் Folic Acid மாத்திரையும் சாப்பிடவேண்டும்.
-
தினமும் ரத்தச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள், பழங்கள், பச்சைகாய்கறிகள், பசுமையான கீரைகள், தானிய வகைகள், காய்ந்த பழம் மற்றும் கொட்டை வகைகள், வெல்லம், மாமிச வகைகள், ஈரல், முட்டை, பால் ஆகியவைகளை உணவில் சேர்ந்து கொள்ளவேண்டும்.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்த பட்சம் கீழ்கண்டவாறு இருத்தல் நலம்
HB % அதிக பட்சம் | 14.08 gm % |
ஆண்கள் | 13.00 gm % |
பெண்கள் | 11.00 gm % |
கர்ப்பிணி பெண்கள் | 10.00 gm % |
குழந்தைகள் | 12.00 gm % |
பள்ளி செல்லும் வயதினர் | 12.00 gm % |
முதியோர்கள் | 10.00 gm % |
சனி, 4 ஏப்ரல், 2009
தலைவலி
உடல் நலம் பேணுவோம் : தலைவலி - பத்மா அர்விந்த்
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.
சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு விடக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக்குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது , பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.
அதுமட்டும் இன்றி சில சமயம் தலியில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை).மூளைக்கு இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.
அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் emphysema வரும் முன் அடிக்கடி தலைவலி ஏற்படும். குளிர்காலத்தில் மூடிய சன்னல்கள் காற்றை வெளியேற விடாவண்ணம் வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவின் அதிகரிக்கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி காப்பி போன்ற பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்ததில் அதன் அளவு குறைந்தால் தலைவலி ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு காப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி.
அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால் எத்தனை நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம் மருத்துவர்கள் தலைவலியின் தன்மை அறிந்து குணமாக்க முடியும்.
முன்பு தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக ஆரம்பித்த வலி அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால் எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்க பட வேண்டியவை.
வேலை பளு, மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி: வலி சாதாரணமாக இருக்கும். சில மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையை சுற்றி ஒருவித அழுத்தம் இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம், இசை போன்றவை இத்தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது.
Migraine: இது போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 ம ணி முதல் 3 நாட்கள் வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிகரிப்பதால், வெளிச்சம் அதிகரிப்பதால் தலைவலி அதிகரிக்கும்.
சில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது மருத்துவர்கள் இந்த ஒற்றை தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும் குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்துழைப்பும் குறையக்கூடும்.
Cluster தலைவலி: வலி மிக கொடுமையானது, கண்களை சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விட கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால் வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும்.
இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் மருந்துகள் பயன் தரக்கூடும்.
பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள் இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது.
இது போல மருத்துவர் பரிந்துரை செய்யாமல் கிடைக்கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளில் உப்பதைகளை ஏற்படுத்திக்கொள்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்துவிடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவதோடு, மற்ற குறைபாடுகளும் வர காரணமாகின்ரன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்துகளின் பிடிப்பை எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான மருந்துகளை உட்கொள்ளுதல் எப்படி போக்குவது என்பதும் தான்.
புதன், 1 ஏப்ரல், 2009
இதயம் சில உண்மைகள்!
3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)
6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.
11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.
12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.
13. ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால் அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.