Add this page to Favorites! அன்பார்ந்த வாசர்களே தங்களது வருகைக்கு நன்றி ! இந்த வலை தளத்தை தங்களது Favourite பகுதியில் Book Mark செய்து கொள்ளவும். மருத்துவ சம்பந்தமான கட்டுரைகள் தொடர்ந்து வெளியடப்படும். தங்களது ஆரோகியமான ஆக்கபூர்வமான கருத்துக்களை கருத்துரை பகுதியில் வெளியிடவும். அறிவோம் மருத்துவம்
இவ்வுலக வாழ்க்கை உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60

புதன், 13 மே, 2009

தக்காளி நிறையச் சாப்பிடலாமா? – கே.எஸ்.சுப்ரமணி

பக்கவாதத்தை முழுமையாக முன்கூட்டியே தவிர்க்க முற்றிலும் நிரூபிக்கப்பட்ட புதிய முறை ஒன்று அறிமுகமாகியுள்ளது. அது என்ன?

1998ஆம் ஆண்டு ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆல் பிரட்டோ ஆஸ்ஸிரியோ என்பவர் 44000 பேர்களின் ஒரு வருட உணவு முறையை ஆராய்ந்து பட்டியலிட்டார்.

இவர்கள் ஓராண்டு சாப்பிட்ட 136 வகையான உணவு வகைகளைச் சொல்லச் சொன்னார். பொட்டாசியம் உப்பு அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டவர்கள் மட்டும் இரத்தக்கொதிப்பு, இதய நோய் முதலியவை இன்றி சுகமாக வாழ்ந்து வந்ததைக் கண்டுபிடித்தார். இவர்களின் நரம்பு மண்டலமும் சிறப்பாக இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டார்.

இரத்தக்கொதிப்பு, சோம்பல், நெஞ்சுவலி என்று சில சமயங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு வருட உணவுப் பட்டியலைப் பார்த்தபோது பழங்கள், காய்கறிகள், தானியங்கள் அடிக்கடி இடம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

எனவே, ஒரு மனிதனுக்குத் தினசரி தேவை ஒரு கிராம் பொட்டாசியம் உப்பு. இதை எளிதில் பெறவும் அவரே ஒரு யோசனையைச் சொல்லியுள்ளார்.

”தினமும் இரண்டு தக்காளியை பச்சையாகச் சாப்பிடுங்கள். பகல் உணவில் ஒரு கரண்டி பசலைக்கீரை சேர்த்து வாருங்கள். ஒரு கிராம் பொட்டாசியம் உப்பு இவற்றின் மூலம் எளிதில் கிடைத்துவிடும்.”

பசலைக் கீரை கிடைக்காத போது வேறு கீரைவகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பொட்டாசியம் உப்பு குறைந்திருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

அதிக சோம்பல் வந்து நாளைக்கு வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைச் சமாதானம் செய்துவிட்டுப் படுத்தால், பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். வயிற்றுப் போக்கு, கை, கால்களின் படபடப்பு, உள்ளங்கைகள், கால் பாதங்கள் ஜில்லென்று இருப்பதும் இதன் மற்ற அறிகுறிகளாகும்.

வாழைப்பழம், ஆரஞ்சு முதலியவற்றிலும் ஒரு நாள் தேவைக்கான பொட்டாசியம் இருக்கிறது. இந்த உணவு வகைகளில் மக்னீசியம் உப்பும் இருப்பதால் இரத்தக்கொதிப்பு பக்கவாதம், திடீர் ஹார்ட் அட்டாக், மனக்குழப்பம், நரம்புக்கோளாறு முதலியவையும் தடுக்கப்படும்.

பொறுப்புடனும் பரப்பரப்பாகவும் விரைந்து வேலை செய்யும் நிலையில் உள்ளவர்கள். தினமும் இரண்டு தக்காளி, பசலைக்கீரை ஃபார்முலாவை தொடர்ந்து பின் பற்றுவது நல்லது.

பொட்டாசியம் உப்பிற்காக தினை மாவு, பீன்ஸ், வாழைப்பழங்கள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு வந்தாலும் ஸ்டிரோக் அபாயத்தை தவிர்க்க முடியும். போனஸாக சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இயங்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் சோர்வு தலை காட்டாமல் இருக்கத் தினமும் இரண்டு தக்காளித் திட்டத்தைப் பின்பற்றவும்.

பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் தினம் இரண்டு தக்காளி மற்றும் ஏதாவது ஒரு கீரையைச் சேர்த்து வந்தால், அறிவுத்தெளிவுடன் படிப்பார்கள். ஸ்டிரோக் மற்றும் இதயநோய், சிறுநீரக நோய் முதலிய நோய்கள் உடலில் நுழைய விடாமல் உறுதியாகப் பாதுகாத்துக் கொள்வதுடன் எதிர்காலத்திலும் நலமுடன் வாழ தக்காளி துணைபுரியும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

முகப்பரு

முகப்பரு எதனால் உண்டாகிறது ?

 • ஒவ்வொரு முடி மூட்டுப்பையும் (hair follicle) 'செபம்' (sebum) எனப்படும் எண்ணெய் பசையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியால் மசகிடப்படுகிறது.
 • பருவ வயது வந்ததும் செபம் உற்பத்தி அதிகரிக்கும். முடி மூட்டுப்பைகள், செபத்தாலும், தோல் செல்களாலும் நிரப்பப்படும். இதன் விளைவாக பருவக்கோளாறு (white head) ஏற்படும்.
 • தடுக்கப்பட்ட மூட்டுப்பை திறந்ததும் தடுப்பு 'black head' ஆகக் காணப்படும்.
 • முடிமூட்டுப்பைகளிலுள்ள பேக்டீரியாக்கள் ஒருவித ரசாயணத்தை வெளியேற்றும். அது செபத்துடன் கலந்து அதை அழிக்கும். விளைவாக, சிவப்பான, எரிச்சலுடன் கூடிய முகப்பருக்கள் ஏற்படுகின்றன.
 • சில தீவிர சமயங்களில் கீழ் உண்டாகி, நோடுஸ்ஸ், சிஸ்ட்ஸ் எனப்படும், பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாகும்.
 • இறுதி விளைவாக ஆழ்ந்த குழிகளோடு அல்லது கடித்த தடிப்புகளுடன் கூடிய வடுக்கள் உண்டாகும்.
 • முகப்பரு என்பது சிவந்த, எரிச்சலோடு கூடிய வடுக்களோடு அல்லது எரிச்சலற்ற கரியமுகடு (comedone) களோடு கூடியதாகும்.

யாருக்கு முகப்பருக்கள் வரும் ?

 • முகப் பருக்கள் 13-19 (டீன்ஏஜர்) வயதுக்குடப்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுட்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85%, ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்ப படுகின்றனர்.
 • முகப்பருக்கள் இருபதுகளிலும், முப்பதுகளிலும் கூட தோன்றத் தொடங்கலாம். 10% முதல் 20% பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
 • முகப்பருக்கள், முகத்திலும், மார்பிலும், முதுகிலும் வரும்.

எந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் ?

 • தொப்பி போன்ற தலைக் கச்சுகள், முகவாய்கட்டை தோல்பட்டைகள் முதலியவை உராய்ப்பையும், அதன் விளைவாக வெப்பத்தையும் உண்டாக்கி முடிமூட்டுப் பைகளை அடைக்கச்செய்து, முகப்பருக்களைத் திடீரென உண்டாக்கும்.
 • பசைபோன்ற அழகு சாதனங்கள், எண்ணெய் பாங்கான கூந்தல்பசை (லீணீவீக்ஷீ ரீமீறீ)முகப் பருக்களை மேலும் மோசமாக்கும். எனவே தண்ணீர் அடிப்படையான,எண்ணொய் இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள்.
 • சாக்லெட்டுக்கள், எண்ணெய் பாங்கான உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. உணவுக் கட்டுபாடுகளேதும் தேவையில்லை.

முகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன ?

 • கூடிய விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். உடனடி மருத்துவம் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.
 • துவக்க முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களுக்கே அடங்கி விடும். உதாரணமாக துவக்க நிலையிலுள்ள முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசப்படும், 'பெஞ்சால் பெராக்ஸைடு ஜெல், முகப்பரு லோஷன், ஆண்ட்டிபயாடிக் லோஷன் 'ஏ' விட்டமின் தரும் ஜெல்' போன்ற கீரிம்கள், லோஷன்கள், ஜெல்களுக்கு அடங்கிவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை.
 • மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, டெட்ராசைக்ளின், எரித்ரோமைசின் போன்ற மருந்து வில்லைகள் உதவும். இந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றைக் குறைந்தது 4-6 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
 • ஆண்ட்டி பயாடிக்குகளுக்கும் அடிபணியாத மிகவும் மோசமான முகப்பருக்களுக்கு ஐசோட்ரிடிநைன் (மிsஷீtக்ஷீமீtவீஸீவீஷீஸீ) எனும் மருந்து வில்லைகள் தரப்படலாம்.
 • அமைதியாக இருங்கள். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 4-6 வாரங்கள் பிடிக்கும். எனவே மருத்துவத்தை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.

சனி, 18 ஏப்ரல், 2009

இரத்த சோகை

I. 1.இரத்த சோகை என்றால் என்ன?
நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதசத்து உள்ளது. இது தான் நமக்கு தேவையான பிராண வாயுவை உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லுகிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

2. இரத்த சோகை நோயின் அறிகுறிகள் யாவை?
மயக்கம், கிறுகிறுப்பு, உடல் சோர்வு, தோல் மற்றும் நகங்கள் வெளுத்து விடுவது, முகம், கை, கால் வீங்கி விடுவது, மூச்சுவிடச் சிரமம்.

II. இரத்த சோகை நோய் வருவதற்கான காரணங்கள்:

 1. சத்து குறைவான உணவினால் இரத்தச்சத்து மற்றும் ஃபோலிக்ஆசிட் எனும் சத்து நமது உணவில் குறைவதால்.

 2. அணைத்து வித புற்று நோய்களுக்கும் தரப்படுகின்ற கீமோதெரப்பி, ரேடியம் தெரப்பி எனப்படும் மருத்துவ சிகிச்சையால்

 3. நம் குடலில் உண்டாகும் குடல் புழுக்களால்

III. நமது உடலின் தலை முதல் பாதம் வரை உண்டாகும் பல்வேறு வியாதிகளால்:

 1. மூளையில் ஏற்படும் புற்றுரநோய் கட்டியால் ஏற்படும் இரத்தக்கசிவுகளால்

 2. மூக்கில் இரத்தம் வருவதால்

 3. வாய் மற்றும் தொண்டைப்புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்

 4. வாய் மற்றும் தொண்டை புண்களில் இருந்து இரத்து கசிவு ஏற்படுவதால்

 5. சுவாசப்பையில் நுரையீரல் புற்று நோய் மற்றும் டிபி நோய்களால்

 6. இரைப்பையில் அல்சர் ஏற்படும் புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்

 7. மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற காய்ச்சல்களால் கல்லீரல் மற்றும் கணையம் போன்றவகைகளில் வீக்கம் ஏற்பட்டு இரத்த வாந்தி வருவதால்

 8. குடல் புண்களால் குடல் இரத்தத்தை உறிஞ்சக்கூடிய தன்மை இழப்பதால்

 9. சிறுநீரகத்தில் புற்று நோய்கட்டிகளால் மேலும்

 10. டி.பி.நோய் போன்றவற்றின் பாதிப்புகளால் இரத்த கசிவு ஏற்படுவதால்

 11. கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டிகள் மற்றும் உதிரக்கட்டிகளால் உதிரப்போக்கு அதிகம் ஏற்படுவதால்

 12. நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவதால்

 13. குடல் மற்றும் மலம் கழிக்கும் ஆசனவாய் போன்ற பகுதிகளில் புற்று நோய் கட்டிகள் ஏற்படுவதால்

 14. ஆசனவாயில் மூலம் மற்றும் பவுத்திரம் போன்றவைகளால் இரத்த கசிவு ஏற்படுதல்

IV. கர்பிணிப்பெண்கள் பேறுகாலத்திலும், குழந்தைகளுக்கு பாலுட்டும் காலத்திலும் சத்தான உணவை சாப்பிடாமல் இருத்தல்

V இரத்த சோகையைக் கண்டறிவது எப்படி ? இரத்த சோகை நோய் கண்டறியும் முறை:

 1. மேற்கூறிய அறிகுறிகள் எது இருந்தாலும் மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று, இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB%) அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 2. மருத்துவரின் அலோசனைப் பெற்று 6 மாதங்களுக்கு ஒருமுறை குடல் புழுக்களை அழிக்கும் பூச்சி மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.

 3. இரத்த சோகை அதிகம் இருப்பின் இதற்கும் மருத்தவரின் ஆலோசனை பெற்று 3 மாதங்களுக்கு தொடர்ந்து இரத்தச்சத்து மாத்திரை மற்றும் Folic Acid மாத்திரையும் சாப்பிடவேண்டும்.

 4. தினமும் ரத்தச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள், பழங்கள், பச்சைகாய்கறிகள், பசுமையான கீரைகள், தானிய வகைகள், காய்ந்த பழம் மற்றும் கொட்டை வகைகள், வெல்லம், மாமிச வகைகள், ஈரல், முட்டை, பால் ஆகியவைகளை உணவில் சேர்ந்து கொள்ளவேண்டும்.

நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்த பட்சம் கீழ்கண்டவாறு இருத்தல் நலம்

HB % அதிக பட்சம்

14.08 gm %

ஆண்கள்

13.00 gm %

பெண்கள்

11.00 gm %

கர்ப்பிணி பெண்கள்

10.00 gm %

குழந்தைகள்

12.00 gm %

பள்ளி செல்லும் வயதினர்

12.00 gm %

முதியோர்கள்

10.00 gm %

சனி, 4 ஏப்ரல், 2009

தலைவலி


உடல் நலம் பேணுவோம் : தலைவலி - பத்மா அர்விந்த்
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.

சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு விடக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக்குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது , பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.

அதுமட்டும் இன்றி சில சமயம் தலியில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை).மூளைக்கு இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.

அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் emphysema வரும் முன் அடிக்கடி தலைவலி ஏற்படும். குளிர்காலத்தில் மூடிய சன்னல்கள் காற்றை வெளியேற விடாவண்ணம் வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவின் அதிகரிக்கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி காப்பி போன்ற பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்ததில் அதன் அளவு குறைந்தால் தலைவலி ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு காப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி.

அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால் எத்தனை நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம் மருத்துவர்கள் தலைவலியின் தன்மை அறிந்து குணமாக்க முடியும்.

முன்பு தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக ஆரம்பித்த வலி அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால் எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்க பட வேண்டியவை.

வேலை பளு, மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி: வலி சாதாரணமாக இருக்கும். சில மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையை சுற்றி ஒருவித அழுத்தம் இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம், இசை போன்றவை இத்தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது.

Migraine: இது போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 ம ணி முதல் 3 நாட்கள் வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிகரிப்பதால், வெளிச்சம் அதிகரிப்பதால் தலைவலி அதிகரிக்கும்.

சில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது மருத்துவர்கள் இந்த ஒற்றை தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும் குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்துழைப்பும் குறையக்கூடும்.

Cluster தலைவலி: வலி மிக கொடுமையானது, கண்களை சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விட கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால் வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும்.

இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் மருந்துகள் பயன் தரக்கூடும்.

பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள் இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது.

இது போல மருத்துவர் பரிந்துரை செய்யாமல் கிடைக்கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளில் உப்பதைகளை ஏற்படுத்திக்கொள்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்துவிடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவதோடு, மற்ற குறைபாடுகளும் வர காரணமாகின்ரன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்துகளின் பிடிப்பை எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான மருந்துகளை உட்கொள்ளுதல் எப்படி போக்குவது என்பதும் தான்.

புதன், 1 ஏப்ரல், 2009

இதயம் சில உண்மைகள்!

அறிவோமா அறிவியல்: இதயம் சில உண்மைகள்!

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.


12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.

13. ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால் அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.

திங்கள், 30 மார்ச், 2009

சொரியாசிஸ்

சொரியாசிஸ் (Psoriasis) என்றால் என்ன ?

 • சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கட்தொகையில் 1% - 2% மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள்.
 • தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும். இதன் விளைவாக தோல் மந்தமாகிவிடும், புரையோடும்.
 • தோலிலுள்ள அதிகரிக்கப்பட்ட பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.

சொரியாசிஸ் எவ்வாறு காணப்படும் ?

 • சொரியாசிஸ் என்பது தோலில், பொடிந்து விழும் புரையுடன் கூடிய சிவப்பு திட்டுகிகளாகக் (patches) காணப்படும்.
 • உடலின் எந்தப்பாகமும் தாக்கப்படலாம்.
 • முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படும்.

சொரியாசிஸ் தொற்றும் தன்மையுடைத்ததா ?

 • சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்குப் பரவாது.
 • குறைந்த சுகாதாரத்தின் காரணமாக இது ஏற்படாது.

சொரியாசிஸை எது ஏற்படுத்தும் ?

 • சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் இணைப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
 • சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 1/4 - 1/3 பங்கினர் அதே நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே ! சிலர் விசயங்களில் மரபு நிலை பங்காற்றுகிறது.
 • உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் உறார்மோன்ஸ், சில ஆண்ட்டிஹைபர் டென்
  சிவ் போன்ற சிப மருந்துகள், சொரிமாகிஸை மேலும் மோசமாக்கும்.
 • குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்த கடினமாக்கும்.

சொரியாசிஸ் பிற சூழ்நிலைகளுடன் தொடர்புடையதா ?

 • ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் ஏற்படும்.
 • சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், வண்ணமாற்றத்தையும், நகங்கள் தடிப்பையும் ஏற்படுத்தும்.

சொரியாசிஸ் யாருக்கு வரும் ?

 • சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கும்.
 • சொரியாசிஸ் வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
 • ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு கால மாற்றங்கள் ஏற்படும்.

சொரியரிசிஸ§க்கு என்ன மருத்துவங்கள் கிடைக்கின்றன ?


1. மேற்பூச்சுக்கள் (
creams)

 • இவற்றுள், ஈரப்படுத்துவன (mositurisers), கரி எண்ணை டித்ரானால் (dithranol), கால்சிபாட்ரியல் (calcipatriol) டாபிகல் ஸ்டீராய்ட்ஸ் அடங்கும்.
 • சொரியாசிஸால்கள் பெரும்பாலான மக்கள் லேசான நோயைப் பெற்று, டாபிகல் கிரீம்களைப்பயன்படுத்துவதால் நல்ல நிவாரணத்தைப் பெறுகிறார்கள்.

2. போட்டோதெரபி

 • அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.
 • அல்ட்ரா வைலட் ஒளி அது ஹிக்ஷிஙி அல்லது ஹிக்ஷிகி இருந்தாலும்சரி, தொடர்ந்து பல மாதங்கள், மருத்துவம் செய்துகொண்டால், சொரியாசிஸை நன்கு குணப்படுத்தலாம்.

3. மருந்துகள்

 • தீவிர சொரியாசிஸ§க்கு, உங்கள் தோல்துறை வல்லுனர் வாய்வழி கொள்ளும் மெதாட்டுரக்ஸாட் (methotrexate) அசிட்ரெடின், சைக்ளோஸ்போரின், சல்பா சலாஜைன் போன்ற மருந்துவில்லைகளை எழுதித்தரலாம்.
 • இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை

 • தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
 • மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
 • சொரியாசிஸைக் குணப்படுத்த எழுதித்தரப்பட்ட மருந்து வில்லைகளையும், மருந்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
 • மருத்துவத்தைத் தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
 • தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், புரையேற்படுவதையும் தடுக்கும்.
 • சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
 • மன அழுத்தம் சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும். அமைதியாக யிருக்க, உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும், விருப்பு எடுத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

வெள்ளி, 27 மார்ச், 2009

ஆஸ்த்துமா என்பது என்ன ?

பத்மா அர்விந்த்

Aasthmaஆஸ்த்மா நுரையீரல்கள பாதிக்க கூடிய ஒரு நோய். குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடிய ஒரு நோய். இதனால் அடிக்கடி இழுப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்பு கூட்டில் ஒரு இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்மா இருந்தாலும் ஒவ்வாமை ஏர்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருந்தால் வரக்கூடிய வாய்புகள் அதிகம் என்றாலும் ஆஸ்த்மா வருவதற்கு என்ன முக்கிய காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை. அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே அன்றி குணப்படுத்துதல் இயலாது. கட்டுப்பாடில் இருக்கும் போது இழுப்பு, மூச்சு திணரல் வராமல் இருக்கும். நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்கு செல்வதோ விளையாடுவதோ தடை படுவதில்லை.

ஆஸ்த்மாவின் விளைவுகள்: அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு 12 மில்லியன் குழந்தைகள் ஆஸ்த்மா பாதிப்பால் தாக்கப்பட்டார்கள் (asthma aatack). கிட்டதட்ட 21 மில்லியன் பேர் ஆஸ்த்மா வால் சிரமப்படுகிறார்கள். பெற்றோருக்கு ஆஸ்த்மா இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வர 6 மடங்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்த்மாவை கண்டறியும் வழிகள்: ஆஸ்த்மாவை கண்டறிவது மிக கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவதும் இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது மருத்துவர் கேட்கும் சில கேல்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்துகொள்வார்கள்.

பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுதிணறல் இருக்கிறதா, வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருக்கிறதா, மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக உங்களால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்மா மருந்து எடுத்து கொள்வதற்கு முன், மருந்து எடுத்து கொண்டதன் பின் கணக்கிட்டு பார்க்க படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்மாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் சிறிய குழாய்கள் மூலம் செல்லுகிறது. ஆஸ்த்மா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முட்யாமல் தடைபடுகிறது. அதிக முயுக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இழுப்பில் முடியும். சிலசமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சு குழாய்களை விரிவாக்க முடியாவிட்டால், இறக்கவும் நேரிடும்.

ஆஸ்த்மா வரக்காரணங்கள்: சுற்றுப்புர சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். அமெரிக்கா போன்ற நகரங்களில் குளிர்காலம் முழுதும் சன்னல்கள் போன்றவை திறக்கப்படுவதில்லை என்பதால் சுழலும் காற்றில் மாசு, நுண்ணுயிர்கள் இவை வெளியேற வாய்ப்பு இருப்பதில்லை.

ஆஸ்த்மாவை எப்படி கட்டுபாட்டில் வைத்திருப்பது?

மருத்துவர் தரும் மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். அதேபோல சுற்றுப்புரத்தில் உள்ள மாசினை தவிர்க்க கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல், அல்லது வீட்டு சன்னல்களை திறந்து வைத்தல் போன்றவற்றை செய்யவும். ஆஸ்த்மாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சு குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவ ரின் அறிவுறையை பின்பற்றி கட்டுப்பாட்டுள் வைத்திருங்கள்.

முக்கிய காரணிகள்:

சூழலில் உள்ள சிகரெட் புகையின் மாசு; ஆஸ்த்மா உள்ளவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர் அருகாமையில் புகைப்பதை தவிர்க்க வேண்டும்.

தூசி: தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் இவற்றை அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். அதேபோல stuffed animal விளையாட்டு பொம்மைகள் கொடுக்காதீர்கள். வீட்டிற்கு வெளியே காற்றில் உள்ள மாசு: சில நிறுவனங்கள் வெளியேற்றும் புகை, கார் போன்ற வாகனங்களில் வெளியிடும் புகை போன்றவை ஆஸ்த்மா உள்ளவருக்கு ஆபத்தை வரவழைக்க கூடும்.

கரப்பான் பூச்சிகள் அடைசல் அதிகம் இருக்கும் இடத்தில் நிறைய இருக்கும். இவற்றை கொல்ல பயன் படுத்தும் மருந்தின் வீரியம் ஆஸ்த்மாவை வரவழைக்கூடியது. அதனால் வீட்டில் நீர் தேங்கி இருக்கும் இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.

செல்ல பிராணிகள் பூனை, நாய் போன்ற இவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. பிறகு அது ஆஸ்த்மாவில் கொண்டு விடும். எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடி உள்ள செல்ல பிராணிகலை படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து முடியை அகற்றுவது முக்கியம்.

பாசி : பாசி, மோல்ட் இவற்றை சுவாசிப்பதன் மூலம் அதிக ஆஸ்த்மா விளைவுகள் நேரலாம். வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியம்.