சொரியாசிஸ் (Psoriasis) என்றால் என்ன ? | |
- சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கட்தொகையில் 1% - 2% மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள்.
- தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும். இதன் விளைவாக தோல் மந்தமாகிவிடும், புரையோடும்.
- தோலிலுள்ள அதிகரிக்கப்பட்ட பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.
|
சொரியாசிஸ் எவ்வாறு காணப்படும் ? |
- சொரியாசிஸ் என்பது தோலில், பொடிந்து விழும் புரையுடன் கூடிய சிவப்பு திட்டுகிகளாகக் (patches) காணப்படும்.
- உடலின் எந்தப்பாகமும் தாக்கப்படலாம்.
- முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படும்.
|
சொரியாசிஸ் தொற்றும் தன்மையுடைத்ததா ? |
- சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்குப் பரவாது.
- குறைந்த சுகாதாரத்தின் காரணமாக இது ஏற்படாது.
|
சொரியாசிஸை எது ஏற்படுத்தும் ? |
- சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் இணைப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
- சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 1/4 - 1/3 பங்கினர் அதே நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே ! சிலர் விசயங்களில் மரபு நிலை பங்காற்றுகிறது.
- உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் உறார்மோன்ஸ், சில ஆண்ட்டிஹைபர் டென்
சிவ் போன்ற சிப மருந்துகள், சொரிமாகிஸை மேலும் மோசமாக்கும். - குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்த கடினமாக்கும்.
|
சொரியாசிஸ் பிற சூழ்நிலைகளுடன் தொடர்புடையதா ? |
- ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் ஏற்படும்.
- சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், வண்ணமாற்றத்தையும், நகங்கள் தடிப்பையும் ஏற்படுத்தும்.
|
சொரியாசிஸ் யாருக்கு வரும் ? |
- சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கும்.
- சொரியாசிஸ் வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
- ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு கால மாற்றங்கள் ஏற்படும்.
|
சொரியரிசிஸ§க்கு என்ன மருத்துவங்கள் கிடைக்கின்றன ? |
1. மேற்பூச்சுக்கள் (creams) - இவற்றுள், ஈரப்படுத்துவன (mositurisers), கரி எண்ணை டித்ரானால் (dithranol), கால்சிபாட்ரியல் (calcipatriol) டாபிகல் ஸ்டீராய்ட்ஸ் அடங்கும்.
- சொரியாசிஸால்கள் பெரும்பாலான மக்கள் லேசான நோயைப் பெற்று, டாபிகல் கிரீம்களைப்பயன்படுத்துவதால் நல்ல நிவாரணத்தைப் பெறுகிறார்கள்.
2. போட்டோதெரபி - அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.
- அல்ட்ரா வைலட் ஒளி அது ஹிக்ஷிஙி அல்லது ஹிக்ஷிகி இருந்தாலும்சரி, தொடர்ந்து பல மாதங்கள், மருத்துவம் செய்துகொண்டால், சொரியாசிஸை நன்கு குணப்படுத்தலாம்.
3. மருந்துகள் - தீவிர சொரியாசிஸ§க்கு, உங்கள் தோல்துறை வல்லுனர் வாய்வழி கொள்ளும் மெதாட்டுரக்ஸாட் (methotrexate) அசிட்ரெடின், சைக்ளோஸ்போரின், சல்பா சலாஜைன் போன்ற மருந்துவில்லைகளை எழுதித்தரலாம்.
- இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
|
சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை |
- தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
- மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
- சொரியாசிஸைக் குணப்படுத்த எழுதித்தரப்பட்ட மருந்து வில்லைகளையும், மருந்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
- மருத்துவத்தைத் தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
- தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், புரையேற்படுவதையும் தடுக்கும்.
- சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
- மன அழுத்தம் சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும். அமைதியாக யிருக்க, உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும், விருப்பு எடுத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக