பத்மா அர்விந்த் | ||||
ஆஸ்த்மா நுரையீரல்கள பாதிக்க கூடிய ஒரு நோய். குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடிய ஒரு நோய். இதனால் அடிக்கடி இழுப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்பு கூட்டில் ஒரு இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்மா இருந்தாலும் ஒவ்வாமை ஏர்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருந்தால் வரக்கூடிய வாய்புகள் அதிகம் என்றாலும் ஆஸ்த்மா வருவதற்கு என்ன முக்கிய காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை. அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே அன்றி குணப்படுத்துதல் இயலாது. கட்டுப்பாடில் இருக்கும் போது இழுப்பு, மூச்சு திணரல் வராமல் இருக்கும். நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்கு செல்வதோ விளையாடுவதோ தடை படுவதில்லை. ஆஸ்த்மாவின் விளைவுகள்: அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு 12 மில்லியன் குழந்தைகள் ஆஸ்த்மா பாதிப்பால் தாக்கப்பட்டார்கள் (asthma aatack). கிட்டதட்ட 21 மில்லியன் பேர் ஆஸ்த்மா வால் சிரமப்படுகிறார்கள். பெற்றோருக்கு ஆஸ்த்மா இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வர 6 மடங்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஆஸ்த்மாவை கண்டறியும் வழிகள்: ஆஸ்த்மாவை கண்டறிவது மிக கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவதும் இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது மருத்துவர் கேட்கும் சில கேல்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்துகொள்வார்கள். பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுதிணறல் இருக்கிறதா, வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருக்கிறதா, மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக உங்களால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்மா மருந்து எடுத்து கொள்வதற்கு முன், மருந்து எடுத்து கொண்டதன் பின் கணக்கிட்டு பார்க்க படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்மாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் சிறிய குழாய்கள் மூலம் செல்லுகிறது. ஆஸ்த்மா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முட்யாமல் தடைபடுகிறது. அதிக முயுக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இழுப்பில் முடியும். சிலசமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சு குழாய்களை விரிவாக்க முடியாவிட்டால், இறக்கவும் நேரிடும். ஆஸ்த்மா வரக்காரணங்கள்: சுற்றுப்புர சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். அமெரிக்கா போன்ற நகரங்களில் குளிர்காலம் முழுதும் சன்னல்கள் போன்றவை திறக்கப்படுவதில்லை என்பதால் சுழலும் காற்றில் மாசு, நுண்ணுயிர்கள் இவை வெளியேற வாய்ப்பு இருப்பதில்லை. ஆஸ்த்மாவை எப்படி கட்டுபாட்டில் வைத்திருப்பது? மருத்துவர் தரும் மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். அதேபோல சுற்றுப்புரத்தில் உள்ள மாசினை தவிர்க்க கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல், அல்லது வீட்டு சன்னல்களை திறந்து வைத்தல் போன்றவற்றை செய்யவும். ஆஸ்த்மாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சு குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவ ரின் அறிவுறையை பின்பற்றி கட்டுப்பாட்டுள் வைத்திருங்கள். முக்கிய காரணிகள்: சூழலில் உள்ள சிகரெட் புகையின் மாசு; ஆஸ்த்மா உள்ளவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர் அருகாமையில் புகைப்பதை தவிர்க்க வேண்டும். கரப்பான் பூச்சிகள் அடைசல் அதிகம் இருக்கும் இடத்தில் நிறைய இருக்கும். இவற்றை கொல்ல பயன் படுத்தும் மருந்தின் வீரியம் ஆஸ்த்மாவை வரவழைக்கூடியது. அதனால் வீட்டில் நீர் தேங்கி இருக்கும் இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம். செல்ல பிராணிகள் பூனை, நாய் போன்ற இவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. பிறகு அது ஆஸ்த்மாவில் கொண்டு விடும். எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடி உள்ள செல்ல பிராணிகலை படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து முடியை அகற்றுவது முக்கியம். பாசி : பாசி, மோல்ட் இவற்றை சுவாசிப்பதன் மூலம் அதிக ஆஸ்த்மா விளைவுகள் நேரலாம். வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியம். |
வெள்ளி, 27 மார்ச், 2009
ஆஸ்த்துமா என்பது என்ன ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Very important article.
பதிலளிநீக்கு