பக்கவாதத்தை முழுமையாக முன்கூட்டியே தவிர்க்க முற்றிலும் நிரூபிக்கப்பட்ட புதிய முறை ஒன்று அறிமுகமாகியுள்ளது. அது என்ன?
1998ஆம் ஆண்டு ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆல் பிரட்டோ ஆஸ்ஸிரியோ என்பவர் 44000 பேர்களின் ஒரு வருட உணவு முறையை ஆராய்ந்து பட்டியலிட்டார்.
இவர்கள் ஓராண்டு சாப்பிட்ட 136 வகையான உணவு வகைகளைச் சொல்லச் சொன்னார். பொட்டாசியம் உப்பு அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டவர்கள் மட்டும் இரத்தக்கொதிப்பு, இதய நோய் முதலியவை இன்றி சுகமாக வாழ்ந்து வந்ததைக் கண்டுபிடித்தார். இவர்களின் நரம்பு மண்டலமும் சிறப்பாக இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டார்.
இரத்தக்கொதிப்பு, சோம்பல், நெஞ்சுவலி என்று சில சமயங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு வருட உணவுப் பட்டியலைப் பார்த்தபோது பழங்கள், காய்கறிகள், தானியங்கள் அடிக்கடி இடம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
எனவே, ஒரு மனிதனுக்குத் தினசரி தேவை ஒரு கிராம் பொட்டாசியம் உப்பு. இதை எளிதில் பெறவும் அவரே ஒரு யோசனையைச் சொல்லியுள்ளார்.
”தினமும் இரண்டு தக்காளியை பச்சையாகச் சாப்பிடுங்கள். பகல் உணவில் ஒரு கரண்டி பசலைக்கீரை சேர்த்து வாருங்கள். ஒரு கிராம் பொட்டாசியம் உப்பு இவற்றின் மூலம் எளிதில் கிடைத்துவிடும்.”
பசலைக் கீரை கிடைக்காத போது வேறு கீரைவகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பொட்டாசியம் உப்பு குறைந்திருப்பதை எப்படி அறிந்து கொள்வது?
அதிக சோம்பல் வந்து நாளைக்கு வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைச் சமாதானம் செய்துவிட்டுப் படுத்தால், பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். வயிற்றுப் போக்கு, கை, கால்களின் படபடப்பு, உள்ளங்கைகள், கால் பாதங்கள் ஜில்லென்று இருப்பதும் இதன் மற்ற அறிகுறிகளாகும்.
வாழைப்பழம், ஆரஞ்சு முதலியவற்றிலும் ஒரு நாள் தேவைக்கான பொட்டாசியம் இருக்கிறது. இந்த உணவு வகைகளில் மக்னீசியம் உப்பும் இருப்பதால் இரத்தக்கொதிப்பு பக்கவாதம், திடீர் ஹார்ட் அட்டாக், மனக்குழப்பம், நரம்புக்கோளாறு முதலியவையும் தடுக்கப்படும்.
பொறுப்புடனும் பரப்பரப்பாகவும் விரைந்து வேலை செய்யும் நிலையில் உள்ளவர்கள். தினமும் இரண்டு தக்காளி, பசலைக்கீரை ஃபார்முலாவை தொடர்ந்து பின் பற்றுவது நல்லது.
பொட்டாசியம் உப்பிற்காக தினை மாவு, பீன்ஸ், வாழைப்பழங்கள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு வந்தாலும் ஸ்டிரோக் அபாயத்தை தவிர்க்க முடியும். போனஸாக சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இயங்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் சோர்வு தலை காட்டாமல் இருக்கத் தினமும் இரண்டு தக்காளித் திட்டத்தைப் பின்பற்றவும்.
பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் தினம் இரண்டு தக்காளி மற்றும் ஏதாவது ஒரு கீரையைச் சேர்த்து வந்தால், அறிவுத்தெளிவுடன் படிப்பார்கள். ஸ்டிரோக் மற்றும் இதயநோய், சிறுநீரக நோய் முதலிய நோய்கள் உடலில் நுழைய விடாமல் உறுதியாகப் பாதுகாத்துக் கொள்வதுடன் எதிர்காலத்திலும் நலமுடன் வாழ தக்காளி துணைபுரியும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in